சிரித்து முடித்த சூரியன்
சில் என வீசும் காற்று
சிலிர்க்க வைக்கும் சிரிப்புடன்
சிக்கனமான சேலையில் ''அவள்''
தன் சிறிது நேர காதலர்களுக்காக
கடல் கரையில் காத்திருக்கும் அவளை
கட்டிலிட
காளையார்களுக்கு மத்தியில்
கடும் போட்டி
கடவுளே!
காலாமின் கனவு
இப்படி கலைக்கிறதே!
இந்த கவிதை எனக்கு சில பெரிய எழுத்தாளர்களை ஞாபகப்படுத்தியது. இன்னும் கூட சமூகக் கோபத்தை அதிகமாகக் காட்டியிருக்கலாம். நல்ல முயற்சி.
ReplyDelete-ஜெய்