நாங்கள் இங்கு சிறகடித்து பறகிறோம்
அங்கு சித்திரவதையில் நீ
எங்கள் குழந்தைகளோ இங்கு பறந்து
பள்ளிக்குச் செல்கிறார்கள்
உன் குழந்தைகளோ அங்கு
பதுங்கு குழியில் பதுங்கி செல்கின்றன
உன்னை காரணம் காட்டி
இங்கு பல கட்சி கொடிகள்
காற்றில் பறக்கின்றன
பல பத்திரிகைகள்
பணம் சம்பாதிக்கின்றன
உனக்காக சிலர் சிந்தும்
கண்ணீரும் சிறிது நேரம் தான்
நீ இடிந்த இதயத்தோடு
இந்தியா வந்தாலும்
உன்னை இன்முகத்தோடு வரவேற்க
இங்கு யாரும் இல்லை
இது தான்
இன்றைய இந்தியாவின் நிலை.
- இப்படிக்கு
வெட்கத்துடன்
ஒரு இந்தியத் தமிழன்
இதில் இந்தியன் வெட்கப்பட ஒன்றும் இல்லை. இருக்க இடம் வேண்டும் என்று சண்டையிட்டு கேட்க்கும் கூட்டம், சண்டையில் சாவது உயிருள்ள மனிதர்கள் என்பது புரிந்து கொண்டால் போதும்.
ReplyDelete