Monday, April 4, 2011

வெங்காய வேதாந்தம்

மார்ச் 11ஆம் நாள். மாலை சுமார் 4.00, 4.30 மணி இருக்கும். அலுவலகத்தில் அமர்ந்தபடி என் கம்ப்யூட்டரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடன் சிலரும் கம்ப்யூட்டரைப் பார்த்துக்கொண்டிருந்தனர். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தது வேறு எதையும் அல்ல.சுனாமியால் தாக்கப்பட்ட ஜப்பானைத் தான் BBC ஒளிபரப்பிய சில வீடியோ காட்சிகளைத் தான். சிலர் உரைந்து நின்றனர். சிலர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரவர்கள் அவரவர் கருத்துக்களைக் கூறினர். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அடுத்த நாட்டில் நடந்தால் அதை ஒரு நிகழ்ச்சியாகத் தான் பலரும் பார்க்கின்றனர். இயற்கையின் இறக்கமற்ற செயலை தொடர்ந்து பார்க்கப் பிடிக்காமல் எனது கம்ப்யூட்டரை விட்டு நகர்ந்தேன்.

அப்போது அதைப்  பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார் 'சூப்பர்' என்று.

நான் உடனே, "எது சூப்பர்" என்று கேட்டேன்.

"இந்த சுனாமி தான் சூப்பர்'', என்றார்.
நான் எரிச்சல் கலந்த கோபத்துடன் கேட்டேன், "ஒரு நாட்டை நாசமாக்கும் இந்த சுனாமியா சூப்பர்?"
அதற்கு அவர், "ஆம் இது தான் கடவுளின் வருகை", என்றார்.

கடவுள் இப்படித் தான் வர வேண்டுமா", என்றார் மற்றொருவர்.

அதற்கு இவரோ, "கடவுள் நல்ல முறையில் தான் எல்லோருக்கும் சொன்னார். ஆனால் யாரும் கேட்க்கவில்லை. அது தான் இப்படி வந்திருக்கிறார்", என்றார்.
எனக்கோ கோபம் அதிகரித்தது. அதற்கு மேல் இதைப்பற்றி அவருடன் பேசி பயனில்லை என்பதறிந்து, மேலும் பேச விருப்பப்படாமல் வெளியே சென்றுவிட்டேன்.
பேசிப் பயனில்லை என்றால், பயனில்லை தான். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் எப்போதும் தனது மதத்திற்குச் சொந்தமான புனித நூல வைத்து படித்துக் கொண்டேயிருப்பார். நான் அதை கண்டு கொள்ள மாட்டேன். அவருக்கும் எனக்கும் பலமுறை வாக்குவாதம் வந்ததுண்டு. அப்போதெல்லாம் நான் அவர் அறியாமையைக் கண்டு பாவப்பட்டதுமுண்டு, கோபப்பட்டதுமுண்டு. அவருக்கு வயது 28 தான் இருக்கும். தனது மதம் மீது மதம் கொண்டவர் அவர். ஆரம்பத்தில் என்னுடன் பேசும் போதெல்லாம்,
"இந்த உலகம் சீக்கிரம் அழியப் போகிறது, கடவுள் வரப் போகிறார்", என்று அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார்.
ஒரு கட்டத்தில் அவர் அவ்வாறு பேசுவது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஒரு முறை அவர் அப்படி சொன்னபோது நான் கேட்டேன், "இந்த உலகம் அழிந்தால் எனக்கு என்ன?" என்று. அதற்கு,
"அழியப்போகும் இந்த உலகத்தில் ஏன் பணம் சம்பாரிக்கவும் சொகுசு கார் வாங்கவும் ஆசைப் படுகிறீர்கள்", என்று கேட்டார்.
"இந்த உலகம் தான் அழியப்போகிறதே, நீ ஏன் தினமும் உண்ணுகிறாய்", என்று கேட்டேன் நான்.
"எனக்கு இந்த 5000 ரூபாய் சம்பளம் போதும். நான் இந்த உலகத்தில் வாழும் மக்களைப் போல் சொகுசு வாழ்க்கையையும், சொகுசு காரையும் தேடுவதில்லை", என்றார்.
"நீ இந்த உலகதில் தானே வாழ்கிறாய்", நான் கேட்டேன்.
"நாங்கள் கடவுளுடன் வாழ்கிறோம். சாத்தானின் மக்களால் எங்களைப் புரிந்து கொள்ள முடியாது", என்று என்னை ஏளனமாகப் பார்த்தார்.
எனக்கு கோபம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவரையே பார்த்தேன்.
அவர் தொடர்ந்தார். "நீங்கள் எல்லோரும் கடவுள் தந்த மூலையை பணம் சம்பாதிக்கப் பயன் படுத்துகிறீர்கள். அது தவறு. கடவுள் தந்த மூலையை கடவுளுக்காகத் தான் பயன் படுத்த வேண்டும் என்று கூறி என் கோபத்தை அதிகரித்ததோடல்லாமல் மேலும் தொடர்ந்தார்.
"இந்த அரசாங்கம் படிப்படியாக ஒரு காரியம் செய்து வருகிறது, அது உங்களுக்குத் தெரியுமா?" என்றார்.
"என்ன செய்து வருகிறது", என்று கேட்டேன்.
"ஒரு மனிதனின் தகவல்கள் அனைத்தையும் ஒரு அட்டையில் கொண்டுவரப்போகிறது. அந்த அட்டையை வைத்துக்கொண்டு ஒரு நபரின் அனைத்து தகவல்களையும் உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானலும் தெரிந்து கொள்ளலாம்", என்றார்.
"ஆம். அதுக்கு என்ன? அது நல்ல விஷயம் தானே", என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர், "இது எதைக் குறிக்கிறது தெரியுமா? இந்த உலகத்தை ஒருவன் ஆளப்போகிறான். அவன் தான் 666. இது அனைத்தும் அவன் வேலை. இந்த உலகம் சீக்கிரம் அழியப்போகிறது", என்றார்.

இது எனக்கு முட்டாள் தனமாகப் பட்டது. மேலும் நான் பேச்சைத் தொடர விரும்பவில்லை. அவருடய அறியாமையைக் கண்டு எனக்கு கோபமும் எரிச்சலும் வந்தது. டாக்டர். அப்துல் கலாம் இளைஞர்களால் தான் இந்த தேசம் மாறும் என்றார். ஆனால் இப்படிப் பட்ட இளைஞர்களால் இந்த தேசம் எப்படி மாறும்? மனிதன் ஆசைப்படக்கூடாது, சிந்திக்கக்கூடாது என்று எவனோ ஒருவன் ஏதோ ஒரு நாட்டில் உள்ளவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்த இளைஞர்களை மூலைச் சலவை செய்து கொண்டிருக்கிறான் என்பது மட்டும் நிச்சயம். 

மனிதன் ஆசைப் படுவதை நிறுத்திவிட்டால் இந்த உலகத்தின் முன்னேற்றம் நின்று விடும். ஆம் மனிதன் ஆசைப் படுவதால் அதை அடையும் வழியை யோசிக்கிறான். பின் அந்த ஆசையைத் தொடர உழைக்கிறான். இந்த உலகம் ஆசையால் தான் இயங்குகிறது, வளர்கிறது. என் நண்பரும் அவரைப் போன்றோரும் தான் இந்த உலகத்தின் முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
கவிஞர் புவியரசு சொன்னார், "இந்த உலகம் மெத்தப் படித்தவர்களால் காப்பாற்றப் படாது", என்று.
இந்த உலகத்தை யாரும் காப்பாற்றாவிட்டால் பரவாயில்லை.
இப்படிப் பட்ட எண்ணங்களை இளைஞர்கள் மனதில் விதைக்காமல் இருந்தாலே போதும், இந்த உலகம் முன்னேறி விடும்.

(குறிப்பு: நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. யாரையும் புண்படுத்தும் எண்ணத்தோடும் இதை எழுதவில்லை. )

3 comments:

  1. மதம் மனிதனுக்கு சட்டை போன்றது. ஒருவன் இன்று இந்து மதத்தை சேர்ந்தவனாக இருக்கலாம். அடுத்த வருடம் வேறு மதத்தை சேரலாம். அதற்கு அடுத்த வருடம் வேறு ஒரு மதத்தை சேரலாம். இப்படியே வருடத்திற்கு ஒரு மதம் என்று மாறி கொண்டே இருக்கலாம். ஆனால் அவன் உடலும் உயிரும் இந்த ஜென்மத்தில் மாறுவதில்லை. மதம் மனிதனுக்கு சட்டை போன்றது. மதம் என்கிற சட்டைக்காக பொன்னான உயிரை இழக்க வேண்டாம். மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை.

    ReplyDelete
  2. மழை பெய்வதால் எல்லாவற்றிலும் நீர் ததும்புகிறது. செடி கொடிகள் வளர்கின்றன. காய்கனிகள் காய்கிறது. நெல் விளைகிறது. தானியங்கள் விளைகிறது. சகல ஜீவராசிகளும் தாவரங்களை உண்டு வாழ்கின்றன. மனிதன் காய்கறிகளை உண்கிறான். சில பிராணிகளையும் சாப்பிடுகிறான். ஆடு, மாடு போன்றவை செடிகொடிகளை சாப்பிடுகின்றன. புலி, சிங்கம் போன்றவை ஆடு, மாடு, மான்களை சாப்பிடுகிறது. தாவரங்களை உண்ணும் பிராணிகள், தாவரங்களை உண்டு வாழ்கின்றன. விலங்குகளை உண்ணும் "மாமிசபட்சிணிகள்", தாவரங்களை உண்ணும் விலங்குகளை பிடித்து சாப்பிடுகின்றன. இது இயற்கையின் சமநிலை. இது இயற்கையின் சுழற்சி. யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. காலத்தின் தேவைக்கு ஏற்ப இயற்கை புதிய வடிவங்களை எடுத்துக் கொள்கிறது. பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறது. புதிய விலங்குகள் தோன்றுகிறது. புதிய உருவங்கள் தோன்றுகிறது. ஆனால் அடிப்படை தத்துவம் ஒன்றே.

    ReplyDelete
  3. Please visit my blogspot:

    http://sugavanam-tamil-stories-jokes.blogspot.com/

    ReplyDelete