மாலை 4.30 மணி இருக்கும். தன் அலுவலக படியில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தான் சுரேஷ். அவனது செல் போன் சிரித்தது.
''சொல்லுங்க மேடம், என்ன போனே காணோம்?'', என்றான்.
''சுரேஷ், உடனே கிளம்பி வா, என் ப்ரெண்ட் உன்ன பார்க்கணும்னு சொன்னா'', என்றாள் ப்ரீதா.
''இப்பவா? சான்ஸே இல்ல'', என்றான் சுரேஷ்.
சுரேஷ், ஏன் வரமாட்டேன் என்கிறாய்? நானும் என் ப்ரெண்டும் தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கோம். இங்க ஹோஸ்டல்ல எங்களுக்கு போர் அடிக்குது. நீ வந்தா வெளியே போகலாம் '', என்றாள் ப்ரீதா.
''அப்படியா? நான் 8 மணிக்கு வர்றேன்'', என்றான்.
''போடா'', என்றபடி போனை கட் செய்தாள் ப்ரீதா.
ப்ரீதா சுரேஷின் தோழி. இருவரும் ஓராண்டு கால நண்பர்கள். ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவதும், மது அருந்துவதும், புகை பிடிப்பதும் , அரட்டை அடிப்பதும் அவர்களது ஓராண்டு கால பழக்கமாக இருந்தது.
சுரேஷ் ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் 27 வயது இ ளை ஞ ன். ப்ரீதா இன்றைய நவீன பெண்மணி. வேலை இல்லை. தன் அப்பா அனுப்பும் பணத்தில் ஹோஸ்டலில் தங்கி மதுவிலும், புகையிலும் தன் நாட்களை ஓட்டும் 26 வயது பெண்.
மறுபடியும் சுரேஷின் செல் போன் சிணுங்கியது.
''சுரேஷ், வருவியா, மாட்டியா?'', என்று கொஞ்சலாகக் கேட்டாள் ப்ரீதா.
''யாரு உன்னுடய ப்ரெண்ட்?'', சுரேஷ் கேட்டான்.
''அவ பேரு ரூபா. கால் சென்டரில் வேலை பார்க்குறா''.
''அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு'', என்றாள்.
''அவளுமா தண்ணி அடிக்கிறாள்?'', சுரேஷ் கேட்டான்.
''ஆமாம், பியர் மட்டும் அடிப்பாள். உன்னை பத்தி சொன்னேன். உடனே உன்னை பார்க்கணும்னு சொன்னாள். ரொம்ப நல்ல பொண்ணு, சுரேஷ், அவ'', என்றாள் ப்ரீதா.
''சரி, நான் 7 மணிக்கு வர்றேன்'', சுரேஷ்.
''சரி'', ப்ரீதா போனை கட் பண்ணினாள்.
சுரேஷ் மும்பையில் கொஞ்ச காலம் பணியாற்றியவன். அதனால் பெண்கள் தண்ணி அடிப்பதும், புகை பிடிப்பதும் அவனுக்கு பெரிய விஷயமாக படவில்லை. சிறிது நேரத்தில் ப்ரீதா அவனை மொபைல் போணில் அழைத்தாள்.
''சுரேஷ், வரு ண் வர்றேன் என்றான். நானும் ருபாவும் வெளியே போய்ட்டு 7.30 மணிக்குள்ள வந்திருவோம்'', ப்ரீதா சொன்னாள்.
''ஓ .கே'', என்றபடி போனை கட் செய்தான் சுரேஷ்.
ப்ரீதா வருண் இருவரும் சில கால நண்பர்கள்.
சுரேஷ் தன்னுடய வேலைகளை முடித்து விட்டு நேரம் பார்த்த பொழுது மணி 6.40 ஆகியிருந்தது.
மறுபடியும் செல் போன் அடிக்கவே, அது ப்ரீதா தான் என்று அறிந்ததும் ''சொல்லு ப்ரீதா'', என்றான்.
மறுமுனையில் மாறுபட்ட குரல் ஒலித்தது. ''நான் ரூபா பேசுறேன்''.
'சொல்லுங்க ரூபா''. அவன் குரல் அமைதியாக ஒலித்தது.
''கொஞ்சம் ப்ரீதா கிட்ட சொல்லி சீக்கிரமா ஹாஸ்டல்ல ட்ராப் பண்ண சொல்லுங்க'', என்றாள்.
''ஏன்? என்னாச்சு?'', சுரேஷ் குழப்பமாகக் கேட்டான்
''இங்க கொஞ்சம் நிலைமை சரியில்லை, சுரேஷ். நாங்க இப்ப சிட்டி க்கு வெளிய இருக்கோம். ப்ரீதா கன்ட்ரோலில் இல்லை. அவ ப்ரெண்ட்ஸ் கொஞ்சம் மிஸ் பிஹேவ் பண்றாங்க'', என்று பதட்டமாக சொன்னாள் ரூபா.
இடையே போனை வாங்கிய ப்ரீதா , ''சொல்லுடா'', என்று குளறினாள். அவள் பேச்சு அவள் நிதானத்தை காட்டியது.
''நீ எங்க இருக்க? சீக்கிரம் வா டீ'', என்றான் கோபமாக.
''போடா, நீ ஔட்டிங் கூப்பிட்டா வர மாட்டே. நீ எல்லாம் ஒரு ப்ரேண்டா? நான் இங்க என் ஜாய் பண்றேன்'', என்று பிதற்றினாள்.
''நான் ரூபா. அவ நிதானத்தில் இல்லை. என் போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா? நான் சிட்டிக்கு வெளியே வந்ததும் ஒரு மெஸேஜ் அனுபர்றேன். என்னை கொஞ்சம் வந்து பிக் அப் பண்னிப்பீங்களா? எனக்கு 11 மணிக்கு ஷிப்ட் '' என்றாள் ரூபா.
இடையே போனை பிடுங்கி பேசினாள் ப்ரீதா. ''ஏண்டா, ஔட்டிங் கூப்பிட்டா நீ வர மாட்டியா?''
''உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் மத்த பசங்க கூட போய் தண்ணி அடிக்க கூடாதுணு? ஏன் அந்த பொண்ணையும் சேர்ந்து கெடுக்கிற? சுரேஷ் கொஞ்சம் கோபமாகவே அதட்டினான்.
''போடா, அப்படித்தான் நான் செய்வேன்'', என்றவாறு போனை கட் செய்தாள்.
வேலை செய்ய மனமில்லாமல் வெளியே வந்தான். அப்போது மணி 7.30. காரை எடுத்து கொண்டுஅலுவலகத்துக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய கடையில் ஒரு சிகரெட்டை வாங்கி பத்த வைத்தான். குழம்பிய நிலையில் புகை பிடித்து கொண்டிருந்தான். அவன் செல் போன் பீப் பீப் என்று சத்தம் எழுப்பியது. வந்திருந்த மெஸ்சேஜைப் படித்தான்.
‘’நாங்க அதே இடத்தில் தான் இருக்கோம். எனக்கு பயமா இருக்கு’’- ரூபா
அதை படித்ததும் முதல் வேலையாக ரூபாவின் நம்பரை தன்னுடய செல் போணில் பதிவு செய்து கொண்டான். உடனே ‘’டோன்ட் வரீ’’, என்ற ஒரு பதிலை அனுப்பியும் வைத்தான்.
நேரம் கரைந்து 8.35 ஆனது. மீண்டும் ஒரு முறை அவனுடைய செல் போன் பீப் சத்தம் எழுப்பவே, அதை எடுத்து வந்திருந்த மெஸ்சேஜை படித்தான்.
''ஐ அம் வைய்ட்டிங் நியர் டு ஐ.சி.ஏச். நான் தனியா இருக்கேன். ப்ளீஸ் கம்'', என்ற ரூபாவின் மெஸ்சேஜை படித்ததும் தன் காரை வேகமாக ஐ.சி.ஏச் நோக்கி விரைந்தான்.
இத்தாலியான் காஃபீ ஹௌஸ் அந்த ஊரில் பிரபலமான ஒரு காஃபீ பப். அது அவனுக்கு மிகவும் தெரிந்த இடம் என்பதால் எந்த மறு சிந்தனையும் இல்லாமல் ரூபாவை சந்திக்க சென்றான்.
ஐ.சி.ஏச்-ஐ அடையும் பொழுது நேரம் 9.12. தனது சிவப்பு நிற காரை எதிரே நிறுத்தி விட்டு, ரூபா எங்கேவென்று ஆர்வத்துடன் தேடினான். அவன் கைகள் செல் போனை தேடியது. ரூபாவின் எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.
''ஹெலோ ரூபா, எங்க இருக்கீங்க?''
''நீங்க எங்க இருக்கீங்க?''பதில் கேள்வியாக வந்தது.
''நான், ஐ.சி.ஏச்-க்கு எதிரில் நிற்கிறேன். ரெட் கலர் கார்.'', என்றான்.
''நான் உங்களை பார்த்து விட்டேன். இதோ வருகிறேன்'', பதில் வந்தது.
காரின் உள்ளே இருக்கும் கண்ணாடியால் பின்னே வரும் ருபாவை பார்த்தான் சுரேஷ். சற்றே பெருத்த உடலில், வெள்ளை நிற டீ-சர்ட்டும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தாள். கூந்தலை பின்ணாமல் அடர்த்தியாக விட்டிருந்தாள். சற்று படபடப்புடன் வந்து காரில் ஏறி அமர்ந்த வேகத்தில் ''ஹாய், ஐ அம் ரூபா'', என்றாள்.
''சுரேஷ்'', என்று அவனும் பதிலுக்கு கை கொடுத்தான்.
''என்ன ஆச்சு ரூபா'' என்றான்.
‘'வெரி வெரி பேட் டே, லீவ் இட் சுரேஷ். எனக்கு பசிக்குது. ஜூஸ் சாப்பிடலாம் என்றாள்.
‘ஓகே, போகலாம்’’. ப்ரீதா எங்கே? என்று கேட்டான்.
‘’அவ ஃபுல் ஃபிட்ல இருந்தா. அந்த பசங்க கூட சாப்பிட ரெஸ்டோரெஂட் போய்ருக்கா. நான் வரலேனு சொல்லிட்டேன். எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துது’’, என்றாள்.
‘’ஓகே, கூல், ரில்யாக்ஸ்’’, என்றான்.
‘’இனிமே அவ ப்ரீேன்ட்ஷிப் வேண்டவே வேண்டாம். ஹாஸ்டல் மொதல்ல மாத்தனும்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கார் ஒரு ஜூஸ் கடையை அடைந்தது. சுரேஷ் காரை விட்டு இறங்கும் போது அவளிடம் கேட்டான்,
''வாட் டூ யூ லைக் டு ஹாவ்?''
'ஆரெஂஜ் ஜூஸ்'', என்றாள்.
''ஓகே. வாங்கிட்டு வர்றேன்'', சென்றவன் ஜூஸ் டம்பிலெர்களோடு திரும்பி வந்தான். அவள் அதை குடித்து முடிக்கும் வரை அமைதியாக காத்திருந்தான். அவள் குடித்து முடித்ததும் டம்பிலெர்களை கடையில் திருப்பி கொடுத்து விட்டு காசை செலுத்தி விட்டு திரும்பி வந்தான்.
''போலாமா?'', என்றவன் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக புறப்பட்டான்.
''உங்க ஆஃபீஸ் எங்க இருக்கு?'' கேட்டான்.
''திருச்சி ரோட் வானவில் அப்பார்ட்மெண்ட்ஸ் எதிரே இருக்கு'', என்றாள் ரூபா.
கார் ருபாவின் ஆஃபீஸ் அருகே சென்று அடையும் போது மணி 10.35.
அவள் சொன்ன அப்பார்ட்மெண்ட்ஸ் வந்ததும், ''இங்கயே ஸ்டாப் பண்ணுங்க சுரேஷ், ஆஃபீஸ் கிட்ட வேண்டாம். என் பாய் ப்ரெண்ட் பார்த்தால் ப்ராப்லம் ஆயிடும். நானே கால் பண்றேன். நீங்க கூப்பிட வேண்டாம். அவனுக்கு தெரிஞ்சா ப்ராப்லம்'', என்றாள்.
''ஓகே. டேக் கேர்'', என்றவன் காரை வேகமாக அவன் வீட்டை நோக்கி ஓட்டினான்.
அடுத்த நாள் ரூபாவிடம் இருந்து போன் காலை எதிர்பார்த்தான். எதுவும் வரவில்லை. ஒரு வாரம் கரைந்தது. சுரேஷும் அவளை மறந்து விட்டான். அன்று சனி கிழமை. தனது நண்பர்களுடன் ஊர் சுத்திக் கொண்டிருந்தான். மணி இரவு 9.20. சுரேஷின் செல் போன் சிணுங்கியது. புதிய எண்ணாக இருக்கவே யார் என்று தெரியாமல் எடுத்தவன் குழப்பமாக,
''சுரேஷ்'', என்ற பெண் குரல் கேட்டு, ''எஸ்'', என்றான்.
''ரூபா ஹியர்''
''ஓ, சொல்லுங்க ரூபா. என்ன நம்பர் புதுசா இருக்கு?''
''ஆமாம், நம்பர் சேன்ஜ் பண்ணிட்டேன். ப்ரீதா அந்த பசங்களுக்கு என்னுடைய போன் நம்பர குடுத்துட்டா. அவனுங்க ரொம்ப டிஸ்டர்ப் பண்றானுக. சோ சேன்ஜ் பண்ணிட்டேன்'', என்றாள். சில வினாடிகள் அமைதியாக இருந்தவள் தொடர்ந்தாள்.
''ஓகே. நான் பல முறை சொல்லிட்டேன், என்னுடைய போன் நம்பர யாருக்கும் குடுக்க வேண்டாம்ணு. வர்ஸ்ட் க்யாரக்டர்'', என்று சலித்துக் கொண்டாள்.
''ஓகே. நீங்க எப்படி இருக்கீங்க?'', என்று அவளே தொடர்ந்தாள்.
'ம்ம்ம்..இருக்கேன்'', என்றாள் சுரேஷ்.
''மனசு சரியில்லை. நிறைய ப்ராப்லம். நீங்க ப்ரீயா?, கேட்டாள் ரூபா.
''ம்ம்..ஃப்ரீ தான். சொல்லுங்க ரூபா'', என்றான்.
''எங்காவது வெளியே போலாமா?,'' என்றாள்.
''இப்பவா?'', என்றவன் தான் கை கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 10.06. ''ஓகே. வர்றேன். பட் எங்க போறது?'' என்று கேட்டான்.
நீங்க வர்றெனு சொல்லுங்க மொதல்ல'', என்றாள்.
''எங்க வரணும்''
''வீ.கே.எஸ் காலேஜ் கிட்ட வந்து கால் பண்ணுங்க.'', என்றாள் ரூபா.
'ஓகே' என்று சொன்னவன் உடனே புறப்பட்டான். பத்து நிமிடத்தில் அவள் சொன்ன இடத்தை சென்றடைந்தான். அவன் போன் செய்த ஓரிரு நிமிடத்தில் ரூபா அந்த அப்பார்ட்மெண்ட்சை விட்டு வெளியே வந்தாள்.
கருப்பு நிற டீ சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். சிவப்பு நிறத்தில் அவள் பூசியிருந்த உதட்டு சாயம் அவனை சிலிர்க்க வைத்தது. அவள் காரில் ஏறிய உடன் அவளது பர்ஃப்யூம் வாசம் காரை நிறைத்து, அவனை மௌனமாக்கியது.
''ஹாய் டா'', என்று அவள் 'டா' போட்டு பேசியது அவள் அவனிடம் எடுத்துக் கொண்ட உரிமையைக் காட்டியது.
''ஹாய், யூ ஆர் லுக்கிங் குட்'', என்றான்.
''தாங்க்ஸ்' என்று ஓதை வார்த்தையில் முடித்தாள்.
''இப்போ எங்கே போறது?'', என்றான் கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு.
''ஒரு பியர் அடிக்கணும் போல இருக்கு. ஷால் வீ ஹாவ்?'' என்றாள்.
''ஓ சூர். எங்கே போகலாம்?''
''நீ சொல்லுடா'', என்றாள் இன்னும் கொஞ்சம் உரிமையாக.
''பார் போகலாமா? இல்லை கார்லயே சாப்பிடுவோமா?'' கேட்டான்.
''இங்கே டிஸ்கொ இருக்கா?'' என்று கேட்டாள்.
''டான்ஸ் ஃப்லோர்னு ஒரு பார் இருக்கு . ஸ்யாடர்டே நைட் நல்லா இருக்கும். வித் ப்யூடிஃபுல் ஹாட் கர்ல்ஸ்'', என்று கூறினான்.
''ஓகே. அங்கயே போகலாம்'', என்றாள்.
கார் வேகமாக அந்த பிரபல ஹோட்டலுக்குள் சென்றது. காரில் இருந்து இறங்கியவன் வேகமாக சென்று இரண்டு டிகெட் வாங்கினான்.
அந்த டான்ஸ் ஃப்லோர் பாருக்கும் செல்லும்போது மணி 10.30 ஆகியிருந்தது.
உள்ளே செல்லும்போது பௌன்செர் சொன்னான் ,''சார், வீ வில் க்லோஸ் த பார் பை 11.30'', என்றான்.
''ஓகே'', என்று சொன்ன சுரேஷ் ருபாவின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான்.
அவந்து இன்னொரு கையில் சிகரெட் பாக்கெட் இருந்தது. சத்தத்திற்கே சவால் விடும் அளவுக்கு அங்கு பாட்டு சத்தம் நிறைந்து இருந்தது. ஆங்கில பாட்டின் இசையால் அந்த டி.ஜே பிரமாதப் படுத்திக்கொண்டிருந்தான். கையில் மதுவுடன், குறைவான ஆடையுடன் பெண்கள் நடனமாடிக்கொண்டிருந்தார்கள். இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். அங்கு வந்த வெய்ட்டர் சுரேஷிடம் ஏதோ கேட்டான். சற்று நேரத்தில் வெய்ட்டர் இரண்டு பியர் பாட்டிலுடன் வந்தான். இருவரும் மற்றவர்கள் நடனமாடு வதை பார்த்தபடி மது அருந்த ஆரம்பித்தனர். அவர்களை பார்த்த ரூபா,
''சுரேஷ், ஷால் வீ டான்ஸ்?'', என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.
இருவரும் மெதுவாக அங்கு ஆடிக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து நடனம் ஆட ஆரம்பித்தனர். இருவரும் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது, சுரேஷ் அவளது இடுப்பைப் பிடித்து ஆட ஆரம்பித்தான். அது அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. சற்று நேரத்தில் சுரேஷ்,
''ரூபா, ஐ வான்ட் டு ஸ்மோக்'', என்றான்.
''மீ டூ'', என்றாள்உடனே அவளும்.
''நீ ஸ்மோக் பண்ணுவியா?'', அவனும் ஒருமையில் பேச ஆரம்பித்தான்.
''எஸ், ஐ லவ் டு'', என்றாள்.
''தட்ஸ் குட்'', என்றான் சுரேஷ்.
இருவரும் ஸ்மோக்கிங் ஸோனுக்கு சென்றனர். அங்கே 3 பெண்களும், 6 ஆண்களும் புகை பிடித்துகொண்டிருந்தனர். அவர்களுடன் இவர்களும் இணைந்து புகைக்க ஆரம்பித்தனர்.
''ரூபா, டிட் யூ என் ஜாய்ட்?''. என்று கேட்டான்.
''எஸ், ஆஃப்டர் அ லோங் டைம்'', என்றவள் புன்னகைத்தாள்.
''என் ரூபா, நீ உன் போய் ப்ரெண்ட் கூட டான்ஸ் ஃப்லோர் க்கு ஒரு நாள் வரலாம் இல்ல?'', கேட்டான் சுரேஷ்.
''இதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. அவன் எப்பவாவது ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வருவான். அப்ப மட்டும் தான் நான் தண்ணி அடிக்க முடியும். அவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நான் ஸ்மோக் பண்றது அவனுக்கு பிடிக்காது. நான் டீ-சர்ட் போடுவது கூட அவனுக்கு பிடிக்காது. நிறைய கண்டிஷன்ஸ் இருக்கு'', என்றாள்.
''என் கூட வந்ததை பற்றி அவன் கிட்ட சொல்லுவியா?''
''மை காட், தெரிஞ்சா அவ்ளோதான்'', என்றவள் தொடர்ந்தாள். இவன் நல்லவன் தான். ஆனால், என் ஹஸ்பண்டை விட பெட்டர். என் ஹஸ்பண்ட் ரொம்ப சந்தேகப் பிராணி. அதனால் தான் நான் விவாகரத்து பண்ணிட்டேன். இவன் அப்படி எல்லாம் இல்லை. பட் என்ஜாய்மெண்ட்டுக்கு அலோ பண்ண மாட்டான். கொஞ்சம் ஸ்ட்ரிக். அது தான் பிடிக்கலை. சில விஷயங்கள் விதி படி தான் நடக்குது . என்ன செய்ய?'', என்றாள் விரக்தியாக.
ஓகே டைம் ஆயிடுச்சு. போகலாமா?’’, என்றான் சுரேஷ்.
‘’ஓகே’ என்று சொல்லி நகர்ந்தவளை பார்த்தான் சுரேஷ். அவள் நடக்கும் போதே தெரிந்தது அவள் நீதானத்தில் இல்லை என்பது. காரில் உள்ளே அமர்ந்தவுடன் சுரேஷை நோக்கி சொன்னாள்,
‘’இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்’’
சுரேஷிடம் இருந்த சிகரெட் பாக்கெட்டைய் வாங்கி ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தாள் ஆனந்தமாக. கார் மெதுவாக செல்ல ஆரம்பித்தது. அவள் அந்த சிகரெட்டை புகைத்படி சுரேஷிடம் கொடுத்தாள்.
அவனும் அதைப் புகைத்தான் . அப்போது ரூபா சொன்னாள் ,
''ஏய், நான் இன்னிக்கு ஹாப்பியா இருக்கேன். என் ஹஸ்பண்டும் என்னைப் புரிஞ்சுக்கல, என் பாய் ப்ரெண்டும் சரியா புரிஞ்சுக்கல'', என்று சொன்னவள் அவன் தலை முடியை தடவ ஆரம்பித்தாள்.
அவன் அவள் கையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஒரு கையால் ஸ்டீரிங்கை பிடித்துக்கொண்டு அவளிடம் பேசினான்.
''டோன்ட் ஃபீல் பாட். வீ ஆல் ஹாவ் ஒன் லைஃப். அண்ட் வீ மஸ்ட் என் ஜாய் இட். ''
அவள் அவன் சொல்லுவதை கவனித்தாள்.
''எல்லாருக்கும் ப்ரொலெம்ஸ் இருக்கு. அதை ஃபேஸ் பண்ண பழகிக்கணும். அவ்வளவுதான்'', என்றான். அவனுடைய வார்த்தைகள் அவளுக்கு ஆறுதல் தந்தது.
அவள் மெதுவாக அவன் தோள் மீது சாய்ந்தாள்.
''என்னுடைய பீளிங்ஸை யாரும் புரிஞ்சுகிட்டது கிடையாது'', என்றவள் அவன் தோள் மீது சாய்ந்தபடி அவனைப் பார்த்தாள்.
அப்போது அந்த நெடுஞ்சாலை வீ.கே.எஸ் காலேஜ்ஜை தொட்டது.
''ரூபா, உன் வீடு வந்தாச்சு'', என்றான்.
''எங்காவது லாங் ட்ரைவ் போகலாம்'', என்றாள்.
அவள் சொன்ன வார்த்தைக்கு மறு பேச்சு சொல்லாமல் காரை நேராக ஓடினான். அவள் சொன்னவுடன் மறு வார்த்தை பேசாமல் அவன் அனைத்தும் செய்வது அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் விரும்பிய சுதந்திரத்தை அவனிடம் கண்டாள். அது அவளைக் கவர்ந்தது. அந்த நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் மட்டும் இருபுறமும் ஆங்காங்கே நிற்க, சாலை மிகவும் சாந்தமாக இருந்தது. காருக்குள் காற்று மெதுவாக வீசியது. அவன் காரை மெதுவாக செலுத்த, அவ்வப்போது சில வண்டிகள் அவன் காரை கடந்து சென்றன.
அவன் தோளில் சாய்ந்திருந்த ரூபா அவனிடம் சொன்னாள்,
''திஸ் நைட் இஸ் வெரீ ரொமேண்டிக்''
''ஆமாம்'', என்று அவள் முகம் பார்த்து சொல்ல நினைத்து திரும்பியவனின் உதடுகளில் உரசியது அவளுடைய உதடுகள். காரின் வேகம் குறைந்தது, உதடுகளின் வேகம் அதிகரித்தது அங்கே. வார்த்தைகள் அமைதியாக, உதடுகள் உரையாடின. அடுத்த வினாடி அவளின் உடல் ஆடையை வெறுத்தது. அவன் காரை ஓரமாக நிறுத்தினான். அங்கு வார்த்தைகளுக்கு வேலை இல்லை ஆதலால், உதடுகள் பேசிக்கொண்டன. அவன் கரங்கள் அவள் உடல் முழுவதையும் சுற்றிப்பார்த்தது. அந்த இன்பம் இருவருக்கும் போதுமானதாக இல்லை என்றாலும் தற்காலிக தேவையை பூர்த்தி செய்ததாக இருந்தது.
கொஞ்சம் நேரம் கழித்து சுரேஷ் காரை ஸ்டார்ட் செய்தான். காரை வேகமாக ருபாவின் வீட்டை நோக்கி செலுத்தினான். இருவரும் எதுவும் பேசவில்லை. மௌனம் மட்டும் மந்திரமாக இருந்தது அங்கே. சிறிது நேரத்தில் ரூபாவின் வீட்டை அடைந்தான்.
''ஸாரீ டா, டோன்ட் மிஸ்டேக் மீ'', என்றவள் தனது அப்பார்ட்மெண்ட் வாசலில் நுழைந்தாள்.
அவள் சென்றதும் சுரேஷ் காரை வேகமாக தனது வீட்டை நோக்கி செலுத்தினான். பாதை நேராக சென்றது. ஆனால் அவன் சிந்தனை இரு பாதைகளில் சென்றது.
''இன்றைய காதல் இவ்வளவு தானா? ரூபாவை என்னவென்று எடுத்துக் கொள்வது? உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவள் என்றா? ஆம். அவள் உணர்ச்சிகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறாள். என்று முடிவு செய்த அவனை இன்னொரு எண்ணம் குறுக்கிட்டது.
உறவுகள் சரியாக இருந்தால், அவள் ஏன் உணர்ச்சிகளுக்கு வடிகால் வேறு இடத்தில் தேடுகிறாள்? உறவுகள் அவளை உணர்ந்து கொள்ளவில்லை. அதனால் தான் அன்பாக பேசிய இவனிடம் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறாள்.
இப்படி ஏராளமான எண்ணங்கள் அவன் மனத்தை சூழ்ந்தன. அப்போது அவன் செல் போன் சத்தமிட்டது. காரை ஒட்டியவாறு வந்திருந்த மெஸேஜ்ஜை படித்தான்.
''ரீச்ட் ஹோம்?'' என்று கேட்டிருந்தாள் ரூபா.
சிரித்தபடி பதில் அனுப்பினான். 'எஸ், ஐ மிஸ் யூ'', என்று.
''மீ டூ'', என்று அவளிடம் இருந்து உடனே பதில் வந்தது.
இவர்களின் இந்த உறவு தொடர்ந்தது. யாருக்கும் தெரியாமல். அவரவர் அந்தரங்கம் அவரவருக்கு புனிதமானது.
கதையின் கரு யதார்த்தமாக இருந்தது. கதாபாத்திரங்கள் இன்னும் கூட யதார்த்தமாக இருந்திருக்கலாம். இது ஒரு நல்ல தொடக்கம். வாழ்த்துகள்.
ReplyDelete-ஜெய்
மரத்தை வளர்ப்பவன் சொர்க்கம் செல்வான்
ReplyDeleteமரங்கள் தெய்வீகமானவை. அவற்றை போற்றி பாதுகாப்பது நமது கடமை
மரத்தை ரசிப்பவன் மனிதன். மரத்தை வளர்ப்பவன் புனிதன்
மரத்தை வளர்ப்பவன் சொர்க்கம் செல்வான்
மரத்திற்கு நீர் ஊற்றுபவனுக்கு செல்வம் செழிக்கும்
பூமியே நமது தாய்.
ReplyDeleteசூரியனே நமது தந்தை.
நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே
நல்ல சிந்தனைகள் எல்லா பக்கத்திலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் - ரிக் வேதம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அழகிய கருத்துகளை ஒரு ஹைக்கூ கவிதையாக மாற்ற முடியும்.
ஒரு காதலன் தனது காதலியை பார்த்து சொல்கிறான்.
"பூமியே நமது தாய்.
சூரியனே நமது தந்தை.
எனக்கு அனைவரும் சகோதர சகோதரிகளே. உன்னை தவிர..."