Tuesday, December 14, 2010

கலையும் கனவு

சிரித்து முடித்த சூரியன்
சில் என வீசும் காற்று
சிலிர்க்க வைக்கும் சிரிப்புடன்
சிக்கனமான சேலையில் ''அவள்''

தன் சிறிது நேர காதலர்களுக்காக
கடல் கரையில் காத்திருக்கும் அவளை
கட்டிலிட 
காளையார்களுக்கு மத்தியில்
கடும் போட்டி

கடவுளே!
காலாமின் கனவு
இப்படி கலைக்கிறதே!

Monday, December 13, 2010

அன்புள்ள இலங்கை தமிழனுக்கு...

நாங்கள் இங்கு சிறகடித்து பறகிறோம்
அங்கு சித்திரவதையில் நீ

எங்கள் குழந்தைகளோ இங்கு பறந்து
பள்ளிக்குச் செல்கிறார்கள்
உன் குழந்தைகளோ அங்கு
பதுங்கு குழியில் பதுங்கி செல்கின்றன

உன்னை காரணம் காட்டி
இங்கு பல கட்சி கொடிகள்
காற்றில் பறக்கின்றன
பல பத்திரிகைகள்
பணம் சம்பாதிக்கின்றன

உனக்காக சிலர் சிந்தும்
கண்ணீரும் சிறிது நேரம் தான்

நீ இடிந்த இதயத்தோடு
இந்தியா வந்தாலும்
உன்னை இன்முகத்தோடு வரவேற்க
இங்கு யாரும் இல்லை

இது தான்
இன்றைய இந்தியாவின் நிலை.


                                                       - இப்படிக்கு

                                                            வெட்கத்துடன்
                                                             ஒரு இந்தியத் தமிழன்

நிலவா? மலரா?

என் காதலிக்காக
கவிதை எழுத
கையில் பேனாடவுடன்
கற்பனைக்காக காத்திருந்தேன்
காலம் தான் கரைந்தது
கவிதை வரவில்லை

அவளை நிலவொடு ஒப்பிட்டேன்
நிலவும் ஒரு நாள்
தேய்ந்து விடும் என்றுணர்ந்தேன்

அவளை  மலரோடு ஒப்பிட்டேன்
மலரும் ஒரு நாளில்
வாடி விடும் என்பதறிவேன்

இறுதியில் கம்பனிடம்
அவளை காண்பித்தேன்
கல்லறையில் இருந்து எழுந்த
கம்பன் எழுதி முடித்தான்
அவள் எந்த கவிஞனின் கற்பனைக்கும்
எட்டாத கவிதை என்று!

என்னவள்

நிலவில்லாத மேகத்தின்
சில பாகங்களை
நீக்கி விட்டு பார்த்தேன்
தெரிந்தது
அவள் முகம்

சிதறி கிடந்த
சில நட்சதிரங்களை
சில இடங்களில் வைத்து பார்த்தேன்
சிரித்தது
அவள் முகம்

கடவுளே!

கருமை நிறத்தில்
இத்தனை கலையான
பெண் சிலையா?

அருவியாய் கொட்டும் கூந்தலும்
அளவான இடுப்பும்
சிலிர்க்க வைக்கும் சிரிப்பும்
மொத்தத்தில்

அவள்
ஒரு
சித்திரவதை!

மனிதன்

சிறிது நேர வாழ்க்கைக்காக
 நம்பிக்கையுடன்
சிறகடிக்கும் ஈசல் பூச்சி
மின்சாரம் இல்லாமல்
விளக்கை ஏந்தி
வியக்க வைக்கும்
மின்மினி  பூச்சி

பார்க்கும் கண்களை
பசுமையாக்கும்
பட்டாம்பூச்சி

இவற்றுக்கு மத்தியில்
முயற்சியும் இல்லாமல்
நம்பிக்கையும் இல்லாமல்
வாழ்க்கை சிந்தனையும் இல்லாமல்
வாழ்கின்ற சில
சிரிக்கும் பூச்சிகள்!

விடியலை தேடி!

விடியலை    தேடி
வீரத்தோடு   விளையாடிக்கொண்டிருக்கும்
புலிகள் பிறந்த மண்ணில்
புள் கூட புரட்சி பேசும்
பூ கூட போர் தொடுக்கும்

ஈழம் ஒன்று வேண்டி
இனம் ஒன்று  போராடிக்கொண்டிருக்கிறது 
புலிகள் என்றால்
புரியாதவர்களுக்கு புதிர் தான்
புரிந்தவர்களுக்கு அது ஒரு
புரட்சி!